கொவைட்-19 விவகாரம்…. பல்வேறு ரயில்கள் ரத்து தென்னக ரயில்வே அறிவிப்பு… ரத்தான ரயில்கள் விவரம் உள்ளே…

கொவைட்-19 வைரஸ் தொற்று மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாததால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மற்றும் வந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் தற்போது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- சந்திரகாச்சி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில் வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும்,
- அதேபோன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு கட்டண ரயில் 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
- இதுபோல, பராமரிப்பு பணிகள் காரணமாக சாப்ரா- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கங்கா காவேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 23, 25, 30 மற்றும் மார்ச் 1, 6 ஆகிய தேதிகளிலும்,
- சென்னை சென்ட்ரல்- சாப்ரா இடையே கங்கா காவேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் 21, 23, 28, 30 மற்றும் ஏப்ரல் 4ம் தேதி இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை சென்ட்ரல்- மதுரை ஏசி துரந்தோ எக்ஸ்பிரஸ் 23, 25, 30ம் தேதியும், மதுரை- சென்னை சென்ட்ரல் ஏசி துரந்தோ எக்ஸ்பிரஸ் 24, 26, 31ம் தேதியும்,
- சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் ஏசி வாராந்திர எக்ஸ்பிரஸ் 20, 24, 27 31 ஆகிய தேதிகளிலும்,
- திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் ஏசி வாராந்திர எக்ஸ்பிரஸ் 22, 25, 29, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளிலும்,
- மங்களூர் சென்ட்ரல்- மட்கோன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்,
- மட்கோன்- மங்களூர் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்,
- சென்னை சென்ட்ரல்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் 20, 22 ஆகிய தேதிகளிலும்,
- செகந்திராபாத்- சென்னை சென்ட்ரல் இடையேயான ரயில் 21, 23 ஆகிய தேதிகளிலும்,
- எர்ணாகுளம் ஜங்ஷன்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 21ம் தேதியும்,
- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ஜங்ஷன் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
- இதுபோல, ஜபால்பூர்-கோவை ரயில் மார்ச் 21 முதல் 28ம்தேதி வரையும்,
- மறுமார்க்கத்தில் இந்த ரயில் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரையும்ரத்து செய்யப்படுகிறது.
- ஜபல்பூர்- திருநெல்வேலி வாராந்திர ரயில் 26ம் தேதியும்,மறுமார்க்கத்தில் 28ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
- வரும் 31ம் தேதி வரைதிருப்பதி-சென்ட்ரல் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
- 25ம் தேதி ஐதராபாத்-எர்ணாகுளம் ரயில், 26ம் தேதி எர்ணாகுளம்-ஐதராபாத் ரயில்,
- 23ம் தேதி ஐதராபாத்-எர்ணாகுளம் ரயில், 25ம் தேதி திருச்சி-ஐதராபாத் ரயில்,
- சாம்பல்பூர்-பனாஸ்வாடி ரயில் 18 மற்றும் 25ம் தேதி வரையிலும்,
- பனாஸ்வாடி-சாம்பல்பூர் ரயில் 19 மற்றும் 26ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது.
- சென்ட்ரல்-செகந்திராபாத் ரயில் 27மற்றும் 29ம் தேதியும், மறுமார்க்கத்தில் 28 மற்றும் 30ம்தேதியும்,
- திருவனந்தபுரம்- சென்ட்ரல் ரயில் ஏப்ரல் 1ம் தேதியும்,மறுமார்க்கத்தில் 2ம் தேதியும்,
- எர்ணாகுளம்-ராமேஸ்வரம் ரயில் ஏப்ரல்2ம் தேதியும், மறுமார்க்கத்தில் 3ம் தேதியும்,
- விழுப்புரம்-செகந்திராபாத் ரயில் ஏப்ரல் 1ம் தேதியும், மறுமார்க்கத்தில் 2ம்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
- மார்ச் 19ம் தேதி (இன்று) முதல் 31ம் தேதி வரைசெங்கோட்டை-கொல்லம்-செங்கோட்டை ரயில்,
- கொல்லம் – புனலூர்-கொல்லம் ரயில்,
- கொல்லம்-புனலூர்-கொல்லம்,
- புனலூர்- கொல்லம்- புனலூர்,
- திருநெல்வேலி-தூத்துக்குடி-திருநெல்வேலி,
- திருநெல்வேலி-திருச்செந்தூர்-திருநெல்வேலி, காரைக்குடி-விருதுநகர்-காரைக்குடி,
- காரைக்குடி-திருச்சி-காரைக்குடி,
- திருச்சி-மானாமதுரை-திருச்சி ஆகிய ரயில்கள் முழுவதும்ரத்து செய்யப்படுகிறது.
- இதேபோல இன்று முதல் வரும் 31ம் தேதி வரை குருவாயூர்-புனலூர்-குருவாயூர் ரயில் கொல்லம்-புனலூர்-கொல்லம் இடையே ரத்துசெய்யப்படுகிறது.
- விழுப்புரம்-மதுரை-விழுப்புரம் ரயில் திருச்சி-மதுரை-திருச்சிஇடையே ரத்து செய்யப்படுகிறது.
- கொவைட் 19 மற்றும் மக்களின் வரத்து இல்லாமல் இவ்வாறு ரயில்களை தென்னக ரயில்வே அறிவிப்பில் கூறியுள்ளது.