#BREAKING: கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவக்கம்..!
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்டு பரிசோதனை தொடங்கியது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு பரிசோதனை இந்தியாவில் 16 இடங்களில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா என்ற மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு மருந்தை பல நாடுகளில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த பரிசோதனையின் இரண்டாம் கட்ட போது பங்கேற்ற சில நபர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இந்தியாவிலும், பரிசோதனை நடந்து வந்ததால், கோவிஷீல்டு பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.