தொடங்கியது சுய ஊரடங்கு… இரவு 9.00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை…
கொவைட்-19 உலக நாடுகளை ஒரு பதம் பார்த்துவிட்ட நிலையில் இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும் அனைவருக்கும் இந்த வைரஸ் பாரவ கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொவைட்-19ஐ தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சரியாக 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.அத்துடன் இன்று நாடு முழுவதும் கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும், அதேபோல் மெட்ரோ ரயில் பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது. சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் கடை உள்ளிட்டவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.