கொவைட்-19 தொற்றை தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் பாரத பிரதமரின் அறிவுரைக்கு இனங்கி மக்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் சாலைபோக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் லாரி, பஸ், கார், வேன் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 11 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் வாகனப்போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது.சென்னையில் தினந்தோறும் 1 லட்சம் ஆட்டோ உள்ளது. தற்போது பொதுமக்கள் பயணிக்காத காரணத்தால் வெறும் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மட்டுமே சென்னையில் இயங்குகிறது. இதேபோல் சென்னையில் தினந்தோறும் 15 ஆயிரம் தனியார் வாடகை கார்கள் இயங்கி வந்தது. அதுவும் தற்போது பாதியாக குறைந்தது. இதனால் வாடகை கார் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் வேன், லாரி, தனியார் பஸ் நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 லட்சம் போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…