கொவைட்-19 விவகாரம்… இன்று மட்டும் சென்னையில் 11 இலட்சம் பேர் வேலையிழப்பு….

Default Image

கொவைட்-19 தொற்றை தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் பாரத பிரதமரின் அறிவுரைக்கு இனங்கி மக்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் சாலைபோக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல்  லாரி, பஸ், கார், வேன் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார்  11 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில், 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழகத்தில்  வாகனப்போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது.சென்னையில் தினந்தோறும் 1 லட்சம் ஆட்டோ உள்ளது. தற்போது பொதுமக்கள் பயணிக்காத காரணத்தால் வெறும் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மட்டுமே சென்னையில் இயங்குகிறது. இதேபோல் சென்னையில் தினந்தோறும் 15 ஆயிரம் தனியார் வாடகை கார்கள்  இயங்கி வந்தது. அதுவும் தற்போது  பாதியாக குறைந்தது. இதனால் வாடகை கார் சேவை  முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் வேன், லாரி, தனியார் பஸ் நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 லட்சம்  போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்