Covid -19 சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்!
சேலம் மாவட்டத்தில் கொரோனா தனிமை சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த மாரியம்மாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உறவினருக்கு கொரோனா இருந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஒன்பதாம் பாலி எனும் பகுதியை சேர்ந்த மாரியம்மாளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சேலம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.