தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவைகள் இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்(covaxin)’ தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளன.
இந்த தடுப்பூசியி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படுகின்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்து உள்ளது. உலக விஞ்ஞானிகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்;
மேலும் தீர்வை நோக்கிய பயணம் மிக கடுமையாக இருப்பதாக உலக சுகாதாரமே கை விரித்த நிலையில் மீண்டும் ஒரு உயரிய படைப்பை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
உலகை எல்லாம் கொன்று குடித்து வரும் கொலை கார கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்த செய்தியை எதிர்பார்த்தே உலக வல்லரசுகள் காத்திருந்த வேளையில் அதனை இந்தியா செய்துள்ளது.அதிலும் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது தான் உச்சக்கட்டம்.எப்பொழுது எல்லாம் ஆபத்து தன் தலைக்காட்டும் போது எல்லாம் தலையிடுவது தமிழனாகவே இருப்பான் என்ற கூற்று மெய்யாகி விட்டதாக தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி பொங்குகின்றனர்.
இந்த தடுப்பூசியை ஆக., 15ந்தேதி சுதந்திர தினத்தன்று, அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
கண்டிபிடித்தது யார்? தமிழரா??
ஆம்., திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் தான் கிருஷ்ணா எல்லா(Krishna Ella) விவசாய குடும்பத்தில் பிறந்த இவர். பட்டப்படிப்பை முடித்ததும் ‘பேயர்’ என்கிற ஒரு மருந்து கம்பெனியில் பணியில் வேலைக்கு சேர்ந்தார்.அதன் பின்னர் ‘பிரீடம் பிரம் ஹங்கர்’ என்ற உதவித்தொகை மூலமாக அமெரிக்கா சென்று தனது உயர்கல்வி பயின்றார்.மேலும் ஹவாய் பல்கலையில் முதுகலை பட்டமும், விஸ்கான்சின்-மேடிசன் பல்கலை.,யில் டாக்டர் பட்டமும் முடித்தார்.
கிருஷ்ணா முதலில் வெளிநாட்டில் தங்க தான் விரும்பம் கொண்டார்.ஆனால் தன் தாயின் வற்புறுத்தலின் பேரில் தாயகம் இந்தியா வந்தது மட்டுமின்றி இங்கே ஒரு மருந்து நிறுவனத்தை துவங்கினார்.இம்மருத்துவமனை நிறுவனம் ஆனது ஐதராபாத்தில் 1996ல் ஒரு சிறிய பரிசோதனை கூடமாக தான் நிறுவினார்.
தான் நிறுவிய நிறுவனம் பொதுச் சுகாதாரத் துறையின் பாதுகாப்பில் பங்கு வகிக்க விரும்பம் கொண்டார்.மேலும் அதிக விலைக்கு விற்கின்ற ஹெபடைடிஸ் மருந்தினை மலிவு விலையில் கிடைக்கின்ற வகையில் ஹெபடைடிஸ் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
மற்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த மருந்துக்கு 40 டாலர்கள் என விலைகளை நிர்ணயித்தது.ஆனால் கிருஷ்ணா வெறும் ஒரு டாலருக்கு மருந்து கிடைக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். தனது நிறுவனத்திற்கு நிதியுதவி கிடைக்காத போதிலும், வங்கியில் ரூ.2 கோடி கடனாக பெற்று மருந்து தயாரிப்பில் அவரது நிறுவனத்தை ஈடுபடுத்தினார்.
இந்நிலையில் தான் இளைஞர்களின் விடிவெள்ளி டாக்டர் அப்துல்கலாம் 1999.,ல் ஜனாதிபதி இருந்தார்.அந்த சமயத்தில் கிருஷ்ணா எல்லாவின் மலிவு விலை ஹெபடைடிஸ் மருந்தை கலாம் அவர்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் நிறுவிய இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா என்ற வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது என்பது அறியப்பட வேண்டியது.
இவருடைய சாதனை மக்கள் பயனுக்கு என்று அறிந்ததும் 1996ல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அனுமதி அளித்து, இவருக்கு சொந்தமாக நிலம் அளித்தார்.
இவ்வாறு தனது வாழ்க்கை முழுவதும் கண்டுபிடிப்பு குறைந்த விலையில் மருந்தினை மக்களுக்கு அளித்தல் போன்றவற்றில் ஈடுப்பட்டு வரும் இவர் உலகையே உழுக்கி கொண்டிருக்கும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளது மட்டுமின்றி கொரோனாவிற்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கிறார்.இவர் கண்டுபிடித்த து தான் ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி ஆகும்.இதுவே இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் என்கின்ற சாதனையையும் படைத்துள்ளது இவரது நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…