தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் தற்போது அதிகம் பேசப்படும் பேச்சு கொரோனா தான்.அந்த அளவிற்கு கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு உள்ளது.உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.எனவே கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்தியாவும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது.
இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசிஎம்ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது .முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…