கோவையை குலைநடுங்க வைத்த கொலை.! ஆண் நண்பர்களுடன் கள்ளக்காதலி கைது.! போலீசாருக்கு ரொக்க பரிசு.!

Default Image

கோவை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் வழக்கில், முக்கிய குற்றவாளி பிரபுவின் கள்ளக்காதலி கவிதா எனபதும், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் குப்பை தொட்டியில் ஒரு மனிதரின் கை மட்டும் 6 நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. அதனை கொண்டு விசாரிக்கையில், இது கடந்த 15ஆம் தேதி காணாமல் போன அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரின் கை என்பது தெரியவந்துள்ளளது.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது, நேற்று முன்தினம் கோவை , துடியலூர் சந்தை அருகே, கிணற்றில் மற்ற பாகங்கள் கிடைத்துள்ளது. இதில் தலை, உடல் ஆகிய பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலையாளிகள் வீசி சென்றது அம்பலமாகியுள்ளது.

இந்த கொடூர கொலை எதற்காக நடந்தது. கொலையாளி யார், என்பது பற்றிய விவரத்தை 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமான தேடி வந்தனர்.

முதற்கட்டமாக, பிரபு வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். அதில் பிரபுவை இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. மேலும் பிரபுவுக்கு கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதே போல கவிதா, அமுல் திவாகர் என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பிரபு கவிதாவை கண்டித்துள்ளார். மேலும், கவிதா உடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என பிரபு, கவிதாவை மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கவிதா, பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை அடுத்து, தனது ஆண் நண்பர் அமுல் திவாகர் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து, மூன்று பேரும் திட்டமிட்டு பிரபுவை காந்தி நகரில் உள்ள அமுல் திவாகர் வீட்டுக்கு கூட்டி சென்றனர். இங்கு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். 12 துண்டுகளாக உடலை வெட்டியுள்ளனர்.
பிறகு வெட்டப்பட்டு பாகங்களை துடியலூர் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். இடது கையை குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.

குப்பை தொட்டியில் கிடந்த கையை மட்டும் வைத்து போலீசார் சிறப்பாக துப்பறிந்து, 6 நாட்களில் இந்த கொலை பற்றிய முழு விவரத்தையும் ஆராய்ந்து, குற்றவாளிகளை பிடித்த தனிப்படை காவலர்களை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் வெகுவாக பாராட்டினார். மேலும், 43 போலீசருக்கு ரொக்க பரிசாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஐஜி அறிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்