ஊராட்சி மன்ற தலைவியை சாதி பெயர் கொண்டு திட்டியதாக சர்ச்சை.! வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!

கோவையில் ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை கூறி திட்டியதாக பாலசுப்ரமணியம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊரை சேர்ந்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி சரிதா போலீசில் புகாரளித்துள்ளார்.
அதாவதும், ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகிறார். மேலும், சாதி பெயரை கூறி திட்டினார் என புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாலசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாலசுப்ரமணியனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.