கோவை மாநகர் முழுவதும் காவல்துறை முழுமையான பாதுகாப்பை அளித்து வருகிறது. கேமிராக்கள் இல்லாத இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகருக்குள் வரும் நுழைவுகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. – கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன்தகவல்.
நாடுமுழுவதும், தேசிய புலனாய்வு பிரிவினர் என்.ஐ.ஏ பாப்புலர் பிராண்ட் ஆ இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைaக்கு எதிராக பலர் போராட்டம் நடத்தினர்.
இதே போல கோவையிலும் சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கோவையில் சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பேருந்துகள் போன்ற பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் கோவை முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘ கோவை மாநகர் முழுவதும் காவல்துறை முழுமையான பாதுகாப்பை அளித்து வருகிறது. பாதுகாப்பு பணியில் அணைத்து விதமான காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். கேமிராக்கள் இல்லாத இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகருக்குள் வரும் நுழைவுகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அமைதிக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் குண்டர் சட்டம் போடப்படும். ஒவ்வொரு சம்பவத்திற்கும் 3 தனிப்படைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்.’ என தெரிவித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…