கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞனுக்கு அதிரடி தீர்ப்பு!

கோவை மாவட்டத்தில் மோத்தேபாளையம் எனும் ஊரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் அந்த பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திக்கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளான்.
இந்த சம்பவத்தை அடுத்து போலிஸாரின் தேடுதல் வேட்டைக்கு பின், தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரிடம் விசாரணை நடைபெற்றது தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், தடையங்களை மறைத்ததற்காக 7 ஆண்டுகளும் 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பினை அடுத்து, தினேஷ் குமாரை, போலிசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025