அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.
அப்போது விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாகவும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ராஜகண்ணப்பன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜகண்ணப்பன் தரப்பில், இந்த வழக்குகள் அரசியல் ஆதாயத்துடன் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்குகள் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…