அக்டோபர் 1 முதல் குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி திறப்பு – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்!
குற்றாலம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகள் அக்டோபர் 1 முதல் திறக்கப்பட உள்ளதால், மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலாத்தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்காக அக்டோபர் 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு வரக்கூடிய பயணிகள் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.