சென்னை: தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளாக இன்று குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோ பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கண் கலங்க வைக்கிறது.
அதாவது, கடந்த 17ஆம் தேதி குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பலியானார். அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், திடீரென வெள்ளம் வருவதை உணர்ந்த மக்கள், உடனடியாக சிதறி ஓடுகின்றனர். அப்போது, வீடியோ எடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம், ‘காப்பாத்து டாடி’ என்று உணர்ச்சிப் பொங்க கூக்குரலிடும் பெண்ணின் குரல் காண்போரை உருக செய்கிறது.
நன்றி TN Republic news….
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…