பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் மகளிர் போலீசார் கெபிராஜை கைது செய்தனர்.
கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் புகாரை கேரளாவைச் சேர்ந்த பெண் கொடுத்துள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.
கெபிராஜ் சிபிசிஐடி வசம் உள்ள நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கெபிராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…