தமிழகத்தில் +2 தேர்வு ரத்துக்கு அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்க்கும் ராம்குமார் மனுவுக்கு 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…