முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கேசி பழனிசாமி.
இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக போலி உறுப்பினர்கள் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இபிஎஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கில் கூறிய தகவல் களங்கம் விளைவிப்பதாக கூறி கேசி பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். ஆதாரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது தவறு என கேசி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. இதன்பின், அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…