மீன்பிடி தொழில் விவகாரத்தில் மத்திய அரசு, மாநில இணைந்து பேசி ஒருமித்த கருத்தை எட்டலாம் என உச்சநீதிமன்றம் கருத்து.
சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுருக்குமடி வலைக்கு அனுமதி தந்தால், அதை உரிய இடத்தில்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை யார் கண்காணிப்பார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சென்று சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தூரம் சென்ற பின் எந்த எல்லையில் மீன் பிடிக்கிறார்கள் என்பதை கண்டறிவது கடினம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்கும் அச்சத்தையும் புறந்தள்ளிவிட முடியாது என்றும் குறிப்பிட்டனர். மேலும், சுருக்குமடி வலையால் பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீன்பிடி தொழில் விவகாரத்தில் மத்திய அரசு, மாநில இணைந்து பேசி ஒருமித்த கருத்தை எட்டலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சுருக்குமடி வலை பயன்பாட்டிற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…