சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன் சிபிசிஐடி சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது சிபிசிஐடி இது தொடர்பான வழக்கினை விசாரித்து வருகிறது.ஆனால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…