தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த மார்ச் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுவிசாரணை செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அதன்படி கடந்தமுறை இவ்வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 12ம் அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பெரிசாமி மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, நீதிமன்றம் வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்தது தொடர்பாக நோட்டீஸ் எதுவும் கிடைக்கவில்லை ஐ.பெரிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மறு ஆய்வு வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…