மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன். இதன்பின், தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். சமீபத்தில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்ட பிறகு, மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தேவரின் தங்க கவசம் பாதுகாக்கப்படும். அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் மீண்டும் பெறப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்தாண்டு அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதனால் தங்கக் கவசத்திற்கு அவர் உரிமை கோர முடியாது. இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, நடப்பாண்டு தேவர் குருபூஜை விழாவின்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கோரியிருந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை வங்கி லாக்கரிலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
ஏற்கெனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வங்கிக்கு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் அதிமுக தங்க கவசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…