நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகரிகள் நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்துள்ளனர்.
இதனையடுத்து, அலுவலக உதவியாளருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.