நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள்… கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசை நீதிபதிகள் வலியுறுத்தல்.!
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறைக்கைதிகள் மற்றும் வழக்கறிஞர் ஆன்லைனில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் வழக்கு தொடர்பாக ஆலோசிப்பது மற்றும் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சிறைக்கைதியுடன் ஆன்லைன் வீடியோ கான்பெரன்சிங் மூலம் ஆலோசிக்க முடியுமா என்றும் சிறைத்துறை தலைவரிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து பேசிய சுப்பிரமணியன், விக்டோரியா நீதிபதிகள் அமர்வு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழங்கும் நிதியை விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேபோல் கேரளா போன்ற மாநிலங்களில் நீதித்துறை அதிகாரிகளின் திருத்தப்பட்ட ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறையில் இருப்பது போல் தமிழகத்திலும், ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.