கிராம சபைகளின் தேவைக்கு வலிமை சேர்த்திருக்கிறது நீதிமன்றம் – கமல்ஹாசன் ட்வீட்
கிராம சபைகளின் தேவைக்கு வலிமை சேர்த்திருக்கிறது நீதிமன்றம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில் சாலை மேம்பாட்டு அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.2,650 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கிராம சபைகளும் ஊராட்சி மன்றங்களும், ஒப்புதல் அளிக்காத மர்ம டெண்டர்களை ரத்து செய்த நீதிமன்றம், கிராம சபைகளின் தேவைக்கும் நமது பாதைக்கும் வலிமை சேர்த்திருக்கிறது. நாளை நமதே என்று பதிவிட்டுள்ளார்.
கிராம சபைகளும் ஊராட்சி மன்றங்களும், ஒப்புதல் அளிக்காத மர்ம டெண்டர்களை ரத்து செய்த நீதிமன்றம், கிராம சபைகளின் தேவைக்கும் நமது பாதைக்கும் வலிமை சேர்த்திருக்கிறது.
நாளை நமதே!— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2020