சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம்-நீதிமன்றம் உத்தரவு
பேனர் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தது.பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம்.பின் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிதியை தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும் இதன் பின்னர் அதை அதிகாரிகளின் வருமானத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணையை வரும்-19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.