சிவசங்கர் பாபாவுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைந்தனர்.
பின்னர், அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து, 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடைப்படையில், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பியது.
5 ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி நிலையில் மூன்று ஆசிரியர்கள் நேற்று முன்தினம் ஆஜராகி வாக்குமூலம் தந்த நிலையில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், முதல் போக்சோ வழக்கில் அவரின் நீதிமன்ற காவல் முடிந்தநிலையில், இன்று மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…