நீதிபதிக்கு கத்திக்குத்து – நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!
சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஆண்டு நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்திய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்தாண்டு மாஜிஸ்திரேட் பொன் பாண்டியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓமலூரில் இருந்து சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்த கோபத்தில் பிரகாஷ், பொன் பாண்டியை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.