போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

Default Image

பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரின் மகள் முன் ஜாமீன் மனுவை  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்ட்டுள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவையில்லாமல்  வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சமீபத்தில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் மகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததற்காக போலீஸாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் வாக்குவாத்தில்  ஈடுபட்டார். அப்போது அவர் போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதைதொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரின் மகள் முன் ஜாமீன் கோரி இருந்தனர். இந்த மனுவை விசாரித்தபோது நான் பேசியதை எடிட் செய்து சாதகமான வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளது என பெண் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததால் முன்ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் தந்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps