வைகோவை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் ! ஒரு வருடம் சிறை தண்டனை
வைகோ குற்றவாளி என்று அறிவித்து எம்.பி மற்றும் எம்,எல்,ஏ மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் தீர்ப்பில், வைகோ குற்றவாளியாக நிருபணம் செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து, நீதிபதியிடம் வைகோ இன்றே தண்டனையை அறிவிக்க வேண்டும் என்றார். அதன் படி. வைகோ அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.