அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு ..!
சட்டவிரோத குற்றமான, பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். 120 பக்க குற்றப் பத்திரிகையும், 3,000 பக்க ஆவணங்களையும் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தாக்கல் செய்தனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி தேதி 16-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 29-ம் தேதி (அதாவது இன்று ) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாஜகவுக்காக ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்போம்.! வானதி சீனிவாசன் பேட்டி.!
இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற ஜனவரி 31 ம் தேதி அதாவது நாளை மறுநாள் ( புதன்கிழமை ) வரை நீடித்துள்ளது.
இதனால் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.