சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டிசம்பர் 1 -ம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார்.
15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
ஜனவரி 31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…!
இதுகுறித்து அரசு தரப்பில் கூறுகையில்”அங்கித் திவாரிக்கு ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யவேண்டும்” என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே நீதிமன்றக் காவல் 2 முறை நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அவரின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கித் திவாரி நீதிமன்ற காவல் 3-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…