கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் டிசம்பர் 27 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்தான வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில் முதலில் முகமது தல்கா , முகமது அசாருதீன் , முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு டிசம்பர் 22 வரையில் நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது அவர்களுக்கான நீதிமன்ற காவலை டிசம்பர் 27வரையில் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அவர்கள் என்ஐஏ விசாரணை வளையத்தில் இருக்கின்றனர்.