அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு!
கொரோனா தொற்று காலத்தில் இவர்களது மருத்துவ சேவையை நாம் மறந்து விட முடியாது என நீதிபதி கருத்து.
சித்த மருத்துவர்கள் இல்லாமல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நியமனம் (Food Safety Officer) தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவ பட்டம் பெற்றவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு தகுதி இல்லை என அவர்களை நீக்குவது சட்ட விரோதமானது. கொரோனா தொற்று காலத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இவர்களது மருத்துவ சேவையை நாம் மறந்து விட முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.