அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மீதான 4 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியை எதிர்த்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை, ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து, அ.தி.மு.க எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி இரு பிரிவினர்களுக்கிடையே வெறுப்பை உண்டாகுதல், பொதுமக்களிடம் தவறான தகவலை அனுப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை தடை செய்ய கோரி சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் வந்த போது சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு அவர் தடை விதித்தார்.
அதன்படி அவர் மீதான 4 வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் கைத்தட்டலுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…