35% கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி
35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது,நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் வசூலித்து கொள்ளலாம் என்று தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.தவணை முறையில் வசூலிப்பது தொடர்பாக பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் முழு கட்டணத்தை வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவம்பர் 27-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு விசாரணையை மார்ச் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.