சென்னை பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த தம்பதியினர்! கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் கொரோனா தீவிரமாக வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பீனிக்ஸ் மஹாலில் கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வந்தவர்கள், தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதில் பீனிக்ஸ் மஹாலுக்கு சென்ற 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி அதிகாரி கூறியிருந்த நிலையில், பீனிக்ஸ் மகாலுக்கு சென்று வந்த தம்பதியினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.