நாடு ராமர் மயமாகி வருகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி..!

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். அப்போது, கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு, கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.

சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் பலி.!

ஒரு கிராமம் உருவாவதற்கு முன் அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோயில்கள் உள்ளது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா தற்போது மீண்டும் ராமர் மயமாகி வருகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்