நாட்டுப்படகு மானிய டீசல் 400 லிட்டராக உயர்கிறது – அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிருந்து 400 லிட்டராக உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல திட்டத்தை அறிவிக்கவுள்ளார் என்றும் விசைப்படகுகளுக்கான மானிய டீசல் அளவும் 1,800 லிட்டரிலிருந்து உயர்த்தப்படும் எனவும் இராமநாதபுரம் சென்றுள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.