நிறுத்தப்பட்ட இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை .!
- தேர்தல் ஆணையம் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இந்த வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட நான்கு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எர்ணாமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் , பெரணமல்லுாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணைபோகி ஊராட்சித் தலைவா் பதவிக்கும் , செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 19-வது ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி மற்றும் 26-வது மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இந்த வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை இதனால் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இந்த நான்கு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட நான்கு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.