#BREAKING: வாக்கு எண்ணிக்கை தடை விதிக்க நேரிடும்.., ஐகோர்ட் எச்சரிக்கை..!

Published by
murugan

கொரோனா 2-வது ஆலை பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைக்கு பதிலாக மூன்று அறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்கு எண்ணிக்கையை உரிய பாதுகாப்புடன் நடத்துவதாகவும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று உரிய பாதுகாப்புடன் தேர்தல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. தேர்தல் நடைபெற்ற அன்று தான் கொரோனா நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவிர பிரச்சாரம் தொடங்கிய போது எந்த விதமான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், கொரோனா 2-வது ஆலை பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி, முகக்கவசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Published by
murugan

Recent Posts

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

13 minutes ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

27 minutes ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

45 minutes ago

மழைக்கு வாய்ப்பு முதல் வெப்ப நிலை வரை! வானிலை குறித்து ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

49 minutes ago

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

3 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

3 hours ago