ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது , சித்தோடு பகுதில் உள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரில் நடைபெற்று வருகிறது. 2 அறைகளில் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு 15 சுற்றுகளாக இந்த முடிவுகள் வெளியாக உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரும், மற்ற அரசியல் பிரமுகர்களும் காவல்துறையின் சோதனைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தமாக 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும். அதன் பிறகு, சாமானியர்களின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாக உள்ளது.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…