மீண்டும் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. 8வது சுற்று மும்மரம்!
ஈரோடு கிழக்கில் 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை, உணவு இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது. 7 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது உணவு இடைவேளைக்காக 45 நிமிடம் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 8 சுற்று வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பிறகு 1.45 மணிக்கு தொடங்க உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 8-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46116 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.