சென்னை :70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பின், மக்கள் செலுத்திய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 70 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
