கள்ளச்சாராயம் விவகாரம் – புகார் எண் அறிவிப்பு!

Fake alcohol

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் எண்ணை அறிவித்தது விழுப்புரம் காவல்துறை.

கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கைது நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4943 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தகவல் தெரிவித்திருந்தது.

மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பித்தது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் எண்ணை அறிவித்தது விழுப்புரம் காவல்துறை.

அதன்படி, கள்ளச்சாராயம், விஷச்சாராயம் மற்றும் அயல் மாநில மதுபானங்கள் விற்பனை குறித்து “9042469405” என்ற வாட்சப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்