மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இதற்கான, பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.
தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இன்று காலை 10 மணி முதல் 18ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான ஒதுக்கீடு படிவத்தை ஆகஸ்ட் 22ம் தேதி இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025