அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம்? என்ன படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது? என்பதற்கான ஆலோசனை மையம் அமைக்க அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 – 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம் அமைக்க நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களை கொண்டு தொடர் நெறிப்படுத்தும் முறை, ஆலோசனை மையம் மற்றும் தொடர் நெறிப்படுத்தும் முறை அறிமுகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ.3.08 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1-12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை மையம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.