பாலியல் புகாரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது..!
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கவுன்சிலராக இருந்து நீக்கப்பட்ட பக்கிரிசாமி கைது.
கடலூரில் விருத்தாச்சலம் முப்பதாவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் பக்கிரி சாமி. இவர் அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், பக்கிரிசாமியிடம் விருத்தாச்சலம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் புகாரில் சிக்கியதால் கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கபடுவதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.