குடிசை மாற்று வாரியம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ அன்பரசன்!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் குடிசை மாற்று வாரியம் தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்டார்.

இதனிடையே, குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிசை மாற்று வாரியம் தொடர்பான புதிய அறிவிப்புகள்:

  • பழுதடைந்த 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள், நடப்பு நிதியாண்டில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுக்கட்டுமானம்.
  • மறுக்கட்டுமானம் செய்யும் காலத்தில் வழங்கப்படும் கருணை தொகை ரூ.8,000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டுமான பணிகளின் தரத்தினை ஆய்வு செய்ய ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
  • அடுத்த 6 மாதத்தில் ஒரு லட்சம் வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டித்தரப்படும்.
  • அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழுத்தொகை செலுத்திய 15,000 பயனாளிகளுக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும்.
  • வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்க தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
  • அடுத்த 6 மாதத்தில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
  • கட்டுமான பணிகளில் தரத்தினை உறுதி செய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.
  • புதிதாக கட்டப்படும் 2 மாடிக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்