சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது – உயர்நீதிமன்றம் வேதனை

Default Image

சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர்.

மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்றும் சஸ்பெண்டுக்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததலால் காவல் அதிகாரி பாஸ்கரனை பணியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்